அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டியில் உக்ரேனிய வீராங்கனை எலினா ஸ்விடோலினா தோல்வியடைந்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டி ஒன்றில் கனேடிய வீராங்கனை லேலா அன்னி பெர்னாண்டஸ் உடன் பலப்பரீட்சை நடத்தினார்.

விறுவிறுப்பாக இடம்பெற்ற குறித்த போட்டியில் முதல் செட்டை லேலா அன்னி பெர்னாண்டஸ் 6-3 என கைப்பற்றினார்.

இதனை அடுத்து பதிலடி கொடுக்கும் முகமாக விளையாடிய எலினா ஸ்விடோலினா அடுத்த செட்டை 6-3 என கைப்பற்றி செட்டை சமன் செய்தார்.

தொடர்ந்து வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது செட், டை பிரேக் வரை நீடிக்க அதனை 7-6 என கைப்பற்றி லேலா அன்னி பெர்னாண்டஸ் வெற்றிபெற்றார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here