ஆண்டின் இறுதி கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க பகிரங்க டென்னிஸ், தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகின்றது.

இதில் தற்போது நடைபெற்று முடிந்துள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றுப் போட்டிகளின் முடிவுகளை பார்க்கலாம்.

முதலாவதாக ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றுப் போட்டிகளின் முடிவுகளை பார்க்கலாம்.

இதில், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றுப் போட்டியில், அமெரிக்காவின் பிரான்சிஸ் டியாஃபோ, கனடாவின் பெலிக்ஸ் ஆகர் அலியாசிமை எதிர்கொண்டார்.

இப்போட்டியில், பெலிக்ஸ் ஆகர் அலியாசிம், 4-6, 6-2, 7-6, 6-4 என்ற செட் கணக்குகளில் வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.


ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றுப் போட்டியில், ஜேர்மனியின் பீட்டர் கோஜோவ்சிக்கும் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் கார்ஃபியாவும் மோதினர்.

இப்போட்டியில் 5-7, 6-1, 5-7, 6-2, 6-0 என்ற செட் கணக்குகளில் கார்லோஸ் அல்கராஸ் கார்ஃபியா வெற்றிபெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.


இதேபோல பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றுப் போட்டியில், செக். குடியரசின் பார்போரா கிரெஜ்கோவாவும் ஸ்பெயினின் கர்பின் முகுருசாவும் பலப்பரீட்சை நடத்தினர்.

இப்போட்டியில் பார்போரா கிரெஜ்கோவா, 6-3, 7-6 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று காலிறுதிக்கு தகுதிபெற்றார்.


பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றுப் போட்டியில், பெல்ஜியத்தின் எலீஸ் மெர்டன்ஸ், பெலரஸின் ஆரினா சபாலெங்காவும் மோதினர்.

இப்போட்டியில் 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்குகளில் ஆரினா சபாலெங்கா வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.


பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றுப் போட்டியில், ஜேர்மனியின் ஏஞ்சலீக் கெர்பர், கனடாவின் லேலா அன்னி பெர்னாண்டசை எதிர்கொண்டார்.

இப்போட்டியில், லேலா அன்னி பெர்னாண்டஸ், 4-6, 7-6, 6-2 என்ற செட் கணக்குகளில் வெற்றிபெற்று காலிறுதிக்குள் அடியெடுத்து வைத்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here