ஆண்டின் இறுதி கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க பகிரங்க டென்னிஸ், தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகின்றது.

இதில் தற்போது நடைபெற்று முடிந்துள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றுப் போட்டிகளின் முடிவுகளை பார்க்கலாம்.

முதலாவதாக ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றுப் போட்டிகளின் முடிவுகளை பார்க்கலாம்.

இதில், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றுப் போட்டியில், கிரேக்கத்தின் ஸ்டெபீனோஸ் சிட்ஸிபாஸ், பிரான்ஸின் அட்ரியன் மன்னாரினோவை எதிர்கொண்டார்.

இப்போட்டியில், ஸ்டெபீனோஸ் சிட்ஸிபாஸ், 6-3, 6-4, 6-7, 6-0 என்ற செட் கணக்குகளில் வெற்றிபெற்று மூன்றாவது சுற்றுக்கு தகுதிபெற்றார்.


ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றுப் போட்டியில், அர்ஜெண்டினாவின் டியாகோ ஸ்வார்ட்ஸ்மேனும், தென்னாபிரிக்காவின் கெவீன் எண்டர்சனும் பலப்பரீட்சை நடத்தினர்.

இப்போட்டியில், டியாகோ ஸ்வார்ட்ஸ்மேன், 7-6, 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று மூன்றாவது சுற்றுக்குள் நுழைந்தார்.


இதேபோல பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றுப் போட்டியில், அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்சும், சகநாட்டு வீராங்கயான கோகோ கோஃப்பும் மோதினர்.

இப்போட்டியில், 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்குகளில் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் வெற்றிபெற்று மூன்றாவது சுற்றுக்கு அடியெடுத்து வைத்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here