உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், இந்திய அணியை வீழ்த்துவதற்கு முக்கிய காரணமான, கைல் ஜேமிசன் சொன்ன வார்த்தை, கிரிக்கெட் ரசிகர்ள் பலரது வாழ்த்துக்களை பெற்று வருகிறது.

இந்திய அணிக்கெதிரான உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் தொடரின் இறுதி ஆட்டத்தில், நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இப்போட்டியில், நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமான வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிசன் இது குறித்து கூறுகையில், இது போன்ற மிகப் பெரிய தொடரின் இறுதிப் போட்டியில், அதுவும் இந்தியா போன்ற பலம் வாய்ந்த அணிக்கு எதிராக மூத்த வீரர்களுக்கு வாய்ப்பளிக்காமல் தனக்கு வாய்ப்பளிக்கப்பட்டை எண்ணி நான் மகிழ்கிறேன்.

நீல் வாக்னர், டிம் சவுத்தி, ட்ரெண்ட் போல்ட் போன்ற அனுபவ வீரர்கள் இருந்த போதும், இந்தியா போன்ற பலம் வாய்ந்த அணிக்கு எதிராக ஆரம்ப ஓவர்களை வீச எனக்கு வாய்ப்பளிக்கப்பட்டது என்பது, எனக்கு கிடைத்த சிறப்பம்சமாக கருதுகிறேன்.

இருந்தாலும் நான் எப்போதும் அவர்களுக்கு பின்னாலேயே பயணிக்க விரும்புகிறேன் என்று அடக்கத்துடன் கூறினார். தற்போது இருக்கும் கிரிக்கெட் உலகில் ஒரு போட்டியில் ஜொலித்தால் கூட, ஆடும் வீரர்களுக்கு மத்தியில், கைல் ஜேமிசன் இப்படி அடக்கத்துடன் கூறியதை, கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்த உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப் போட்டியில், கைல் ஜேமிசன் இரண்டு இன்னிங்ஸிலும் விராட் கோஹ்லி விக்கெட்டை வீழ்த்தியி, வெற்றிக்கு திருப்பு முனையை ஏற்படுத்தி கொடுத்தார். அதுமட்டுமின்றி இந்த போட்டியில் மொத்த 7 விக்கெட் வீழ்த்திய அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here