நியூசிலாந்து அணிக்கெதிரான போட்டியில், கோஹ்லி சொன்னது போன்றே அஸ்வின் இரண்டு விக்கெட் எடுத்து காட்டியுள்ளார்.

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையே நடந்த உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப்போட்டியில், நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில், இப்போட்டியின் போது, இரண்டாவது இன்னிங்ஸில் நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு 140 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

அப்போது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சை நியூசிலாந்து அணியின் துவக்க வீரர்கள் சிறப்பாக எதிர் கொண்டனர். இதனால், கேப்டன் கோஹ்லி வேறு வழியின்றி சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினை பந்து வீச அழைத்தார்.

 

ஏனெனில், ஸ்லிப்பில் நின்றுகொண்டு ரவிச்சந்திரன் அஸ்வின் இடம் டீ பிரேக்கிற்குள் 2 விக்கெட்டுகள் உன்னிடமிருந்து வேண்டும் என்று கூறிக்கொண்டே இருந்தார்.

இதை, நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் கேட்கும் அளவிற்கு அவர் சத்தமாக கூறிவந்தார். அவர் கூறியது போன்றே அஸ்வின் துவக்க வீரர்கள் இரண்டு பேரையும் தன்னுடைய அற்புதமான பந்து வீச்சின் மூலம் வீழ்த்தினார். அதன் பின் நியூசிலாந்து அணிக்கு விக்கெட் விழவே இல்லை, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here