இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி குடும்பத்தாருடன் சுற்றுலா சென்ற புகைப்படங்கள் வைரலாகியுள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற டோனி தற்போது ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார்.

இதனிடையே கொரோனா பரவல் காரணமாக ஐபிஎல் போட்டிகளில் கடந்த மே மாதத்தில் தள்ளி வைக்கப்பட்டது.

இந்திய வீரர்கள் இங்கிலாந்து மற்றும் இலங்கை சுற்றுப்பயணங்களுக்காக சென்றுள்ள நிலையில், சிஎஸ்கே அணியின் கேப்டன் டோனி என்ன செய்துகொண்டிருக்கிறார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

 

இதற்கு பதிலளிக்கும் விதமாக அவரது மனைவி சாக்‌ஷி  டோனி வீட்டிலேயே தன் செல்லப்பிராணிகளுடன் பொழுதை கழித்து வருகிறார் என குறிப்பிட்டு புகைப்படங்களை ஷேர் செய்து வந்தார்.

இந்த நிலையில் தற்போது தோனி தனது குடும்பத்தினருடன் சிம்லா சென்றுள்ளார். இமாச்சலப் பிரதேச மாநில அரசு கோவிட் -19 விதிமுறைகளை தளர்த்தியுள்ள நிலையில், டோனி அங்கு சென்று குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நேரம் செலவழித்து வருகிறார்.

இந்த புகைப்படங்களை சாக்‌ஷி டோனி மற்றும் டோனியின் மகள் ஷிவா  நிலையில் தற்போது அந்த புகைப்படங்கள் தான் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

 

மேலும் அதில் டோனி தனது தோற்றத்தை மாற்றி வித்தியாசமாக மீசை வைத்திருப்பதை பார்க்க முடிகிறது.  டோனியின் புதிய தோற்றம் அழகாக இருப்பதாக அவரது ரசிகர்கள் பலரும் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

இதோடு சிம்லாவின் பாரம்பரிய டோப்பி (தொப்பி) அணிந்திருப்பதையும் காண முடிகிறது. இந்த பாரம்பரியமான மற்றும் ஸ்டைலான தலைக்கவசம் ‘குலு டோபி’ என்று அழைக்கப்படுகிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here