இந்திய அணியின் ஆடும் 11 பேரில் ரவீந்திர ஜடேஜாவை சேர்த்தது மிகப் பெரிய தவறு என்று முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்சரேக்கர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்திடம் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்திய அணியின் இந்தத் தோல்விக்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இது தொடர்பாக பேசிய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர், சீதோஷன நிலை வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான சூழலில் இந்தியா 2 சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கி முதலிலேயே தவறு செய்துவிட்டது.

மேலும், டாஸ் போடுவதற்கு ஒருநாள் தாமதமாகியும் அணியை மாற்றவில்லை. அதுமட்டுமின்றி, ரவீந்திர ஜடேஜாவை இவர்கள் இடக்கை சுழற்பந்துவீச்சுக்காக அணியில் எடுக்கவில்லை.

அவரை பேட்டிங்கிற்காக எடுத்தார்கள், அதுதான் தோல்விக்கு காரணம். நான் எப்போதும் ஜடேஜாவை ஒரு பேட்ஸ்மேனாக ஏற்க மறுக்கிறேன்.

அஸ்வினுக்கு பக்கபலமாக ஜடேஜா இருப்பார் என அவரை தேர்வு செய்யவில்லை. அவரை பேட்டிங்கிற்காக தேர்வு செய்துள்ளனர். அது எப்போதும் பலனளிக்காது.

அந்த முடிவு அவர்களுக்கு எதிராகவே இப்போது அமைந்துவிட்டது. பேட்டிங் வேண்டுமென்றாலும் ஹனுமன் விஹாரியை எடுத்திருக்கலாம்.

அவர் நல்ல முறையில் பந்துகளை தடுத்து ஆடக் கூடியவர். அவர் தன்னை ஏற்கெனவே நிரூபித்திருக்கிறார் என கூறியுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here