பாகிஸ்தான் சுப்பர் லீக் ரி-10 தொடரின் 18ஆவது லீக் போட்டியில், இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 10 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது.

அபுதாபியில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், இஸ்லாமாபாத் யுனைடெட் அணியும் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியும் மோதின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இஸ்லாமாபாத் யுனைடெட் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 133 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, வெதரால்ட் 43 ஓட்டங்களையும் அசாம் கான் 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இஸ்லாமாபாத் யுனைடெட் அணியின் பந்துவீச்சில், ஹசன் அலி, மொஹமட் வாசிம் மற்றும் மொஹமடம் மூசா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் அகீப் ஜாவிட் மற்றும் சதாப் கான் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 134 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இஸ்லாமாபாத் யுனைடெட் அணி, 10 ஓவர்களில் எவ்வித விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை கடந்தது. இதனால் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 10 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றது.

இதன்போது உஸ்மான் கவாஜா 41 ஓட்டங்களையும் கொலின் முன்ரோ 90 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 36 பந்துகளில் 5 சிக்ஸர்கள் 12 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 90 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட கொலின் முன்ரோ தெரிவுசெய்யப்பட்டார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here