பாகிஸ்தான் சுப்பர் லீக் ரி-20 தொடரின் 15ஆவது லீக் போட்டியில், லாகூர் குவெலெண்டர்ஸ் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

அபுதாபியில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், லாகூர் குவெலெண்டர்ஸ் அணியும் இஸ்லாமாபாத் யுனைடெட் அணியும் மோதின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற லாகூர் குவெலெண்டர்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இஸ்லாமாபாத் யுனைடெட் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 143 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, பஷீம் அஸ்ரப் 27 ஓட்டங்களையும் கவாஜா 18 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

லாகூர் குவெலெண்டர்ஸ் அணியின் பந்துவீச்சில், ஜேம்ஸ் போல்க்னர் 3 விக்கெட்டுகளையும் அஹமத் டேனியல் மற்றும் ஹரிஸ் ரவூப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் ஷாயின் அப்ரிடி 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 144 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய லாகூர் குவெலெண்டர்ஸ் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் அந்த அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சொஹைல் அக்தர் 40 ஓட்டங்களையும் மொஹமட் ஹபீஸ் 29 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இஸ்லாமாபாத் யுனைடெட் அணியின் பந்துவீச்சில், ஹசன் அலி 2 விக்கெட்டுகளையும் பவாட் அலாம் மற்றும் சதாப் கான் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, ஒரு விக்கெட்டினையும் ஆட்டமிழக்காது 15 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்ட ரஷித் கான் தெரிவுசெய்யப்பட்டார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here