இலங்கை கிரிக்கெட் அணிக்கெதிராக வெள்ளைப் பந்து கிரிக்கெட் தொடரில் விளையாடும், இரண்டாம் தர இந்தியக் கிரிக்கெட் அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணிக்கு முன்னணி வீரரான ஷிகர் தவான் அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். புவனேஷ்வர் குமார் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதில் அணித்தலைவர் விராட் கோஹ்லி, ரோஹித் சர்மா, பும்ரா உள்ளிட்ட முன்னணி வீரர்கள், இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்பதால் இத்தொடரில் விளையாடவில்லை.

ஷிகர் தவான் தலைமையிலான இந்த அணியில், பிருத்வி ஷா, தேவ்தத் படிக்கல், ருத்துராஜ் கெய்க்வாட், சூர்யகுமார் யாதவ், மணீஷ் பான்டே, ஹார்திக் பாண்ட்யா, நிதிஷ் ரணா, இஷான் கிஷன், சஞ்சு சம்சன், யுஸ்வேந்திர சாஹல், ராகுல் சாஹர், கிருஸ்ணப்பா கௌதம், க்ருனல் பாண்ட்யா, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, புவனேஷ்வர் குமார், தீபக் சஹார், நவ்தீப் சைனி, சேட்டன் சக்கரியா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

வலைப்பயற்சி பந்துவீச்சாளர்களாக, இசான் போரெல், சந்தீப் வோரியர், ஷர்தீப் சிங், சாய் கிஷோர் மற்றும் சிமர்ஜூட்சிங் பெயரிடப்பட்டுள்ளனர்.

அத்துடன் இந்த அணிக்கு ராகுல் டிராவிட் மற்றும் அவரது ஊழியர்கள் குழு பயிற்சியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் ஜூலை மாதம் இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியா அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில் விளையாடவுள்ளது.

இந்த தொடரின் முதல் ஒருநாள் போட்டி, எதிர்வரும் ஜூலை மாதம் 13ஆம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதனைத்தொடர்ந்து நடைபெறவுள்ள ரி-20 தொடரின் முதல் போட்டி ஜூலை 21ஆம் திகதி ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here