இலங்கை கிரிக்கெட் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும், எதிர்பார்ப்பு மிக்க தென்னாபிரிக்கா அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
குயிண்டன் டி கொக் தலைமையிலான அணியில், வேகப்பந்து வீச்சாளரான 25வயது மிகேல் பிரிட்டோரியஸ் டெஸ்ட் அறிமுகத்தை பெறுகிறார்.
இந்த சுற்றுப்பயணத்தில் பங்கேற்க காகிசோ ரபாடா மற்றும் டுவைன் பிரிட்டோரியஸ் இன்னும் மருத்துவ ரீதியாக அனுமதிக்கப்படவில்லை. ஆகவே அவர்களின் வருகை குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.
சரி தற்போது அணியின் முழுமையான விபரத்தை பார்க்கலாம்,
குயிண்டன் டி கொக் தலைமையிலான அணியில், டெம்பா பவுமா, ஹெய்டன் மார்க்ரம், ஃபாஃப் டு பிளெசிஸ், பியூரன் ஹென்ட்ரிக்ஸ், டீன் எல்கர், கேசவ் மகாராஜ், லுங்கி ங்கிடி, ரஸ்ஸி வான் டெர் டசென், சரேல் எர்வி, அன்ரிச் நோர்ட்ஜே, க்ளெண்டன் ஸ்டூர்மன், வயான் முல்டர், கீகன் பீட்டர்சன், கைல் வெர்ரெய்ன், மிகேல் பிரிட்டோரியஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இரு அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி, எதிர்வரும் 26ஆம் திகதி சென்சூரியனிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி அடுத்த ஆண்டு ஜனவரி 3ஆம் திகதி ஜோகனஸ்பர்க்கிலும் நடைபெறவுள்ளது