நடைபெற்றுரும் லங்கா பிரீமியர் லீக் தொடரின் 13ஆவது போட்டியில் கொழும்பு கிங்ஸ் அணி ஏழு விக்கெட்டுகளால் கண்டி டர்கர்ஸ் அணியை வீழ்த்தியுள்ளது.

இந்தப்போட்டி, அம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மைதானத்தில் இன்று மாலை நடைபெற்றது.

இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற கண்டி டர்கர்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

இதன்படி, களமிறங்கிய கண்டி அணி 19.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 105 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.

அணிசார்பாக, ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ரஹ்மானுல்லா குர்பஷ் அதிகபட்சமாக 34 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

பந்துவீச்சில், ரி டி சில்வா, பிரியஞ்சன் மற்றும் ஹைஸ் அஹமட் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் மத்தியூஸ், சமீர மற்றும் ருஸ்ஸெல் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இந்நிலையில், பதிலுக்கு 106 என்ற இலகுவான வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய கொழும்பு அணி, 14.1 ஓவர்கள் நிறைவில் மூன்று விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் டினேஸ் சன்டிமல் ஆட்டமிழக்காமல் 35 ஓட்டங்களையும் பிரியஞ்சன் ஆட்டமிழக்காமல் 26 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில், முனாப் பட்டேல், விஸ்வா பெர்னாண்டோ மற்றும் நுவான் பிரதீப் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக சமீர தெரிவுசெய்யப்பட்டார்.

இந்தப் போட்டியின் வெற்றியுடன் கொழும்பு அணி, இதுவரை நடைபெற்ற ஐந்து போட்டிகளில் நான்கில் வெற்றிபெற்று ஐந்து அணிகளின் பட்டியலில் எட்டுப் புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

இதேவேளை, கண்டி ட்ஸ்கர்ஸ் அணி இதுவரை விளையாடிய ஆறு போட்டிகளில் ஒன்றில் மாத்திரம் வெற்றிபெற்று நான்காவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here