மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 134 ஓட்டங்களினால் வெற்றிபெற்றுள்ளது.

ஹெமில்டன்- சீடன் கார்டன் மைதானத்தில் கடந்த 3 ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி, அணித் தலைவர் கேன் வில்லியம்னின் இரட்டை சதத்தின் உதவியுடன் 7 விக்கெட்களை இழந்து 519 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை இடைநிறுத்தியது.

அவ்வணி சார்பாக கேன் வில்லியம்ன் 251 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க பந்துவீச்சில் மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக கெமார் ரோச் மற்றும் செனோன் கெப்ரியல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதன் பின்னர் பதிலுக்கு களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 64 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 138 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இதன்பிறகு 381 ஓட்டங்கள் பின்னிலையில் இருந்த மேற்கிந்திய தீவுகள் அணியை போலோ ஒன் முறையில் துடுப்பெடுத்தாட நியூஸிலாந்து அணி அழைத்தது.

அதன்படி மீண்டும் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 58.5 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 247 ஓட்டங்களை மட்டுமே பெற்று 134 ஓட்டங்களினால் தோல்வியடைந்தது.

அவ்வணி சார்பாக ஜெர்மைன் பிளாக்வுட் 104 ஓட்டங்களையும் அல்சாரி ஜோசப் 86 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில் நியூசிலாந்து அணி சார்ப்பாக நீல் வோக்னர் 4 விக்கெட்களை கைப்பற்றினார்.

இந்த போட்டியின் ஆட்டநாயகனாக இரட்டை சதம் அடித்த நியூசிலாந்து அணித் தலைவர் கேன் வில்லியம்ன் தெரிவு செய்யப்பட்டார்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here