தமிழ்நாட்டைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான டி. நடராஜன், அவுஸ்ரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்டில் இன்று அறிமுகமாகியுள்ளார்.

அவுஸ்ரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், இருபதுக்கு இருப்பது தொடா்களில் விளையாடுகிறது.

ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் டிசம்பர் 4 ஆம் திகதி முதல் இருபதுக்கு இருப்பதுதொடரும் டிசம்பர் 17 முதல் டெஸ்ட் தொடரும் ஆரம்பமாகின்றன.

முதல் இரு ஒருநாள் ஆட்டங்களிலும் இந்திய அணி தோல்வியடைந்து தொடரை இழந்துள்ள நிலையில் 3-வது ஒருநாள் தொடர் தற்போது கேன்பராவில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணித்தலைவர் விராட் கோலி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளார்.

இன்று இடம்பெறும் 3 ஆவது தொடரில் இந்திய அணியில் ஷுப்மன் கில், நடராஜன், ஷர்துல் தாக்குர், குல்தீப் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள். இதன்மூலம் தமிழக வீரரான நடராஜன், சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகியுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here