ரஷ்ய ஒப்பன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சவுரப் வர்மா சாம்பியன் பட்டம் வென்றார்.
ரஷ்ய ஓபன் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் இந்திய வீரர் சவுரப் வர்மா, ஜப்பானின் கோகி வாடானபேவை எதிர்கொண்டார்.

பரபரப்பாக நடைபெற்ற முதல் செட்டை 18-21 என சவுரப் வர்மா இழந்தார். பின்னர் சுதாரித்து விளையாடிய அவர் இரண்டாவது செட்டை 21-12 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றினார்.  அதை தொடர்ந்து நடந்த மூன்றாவது செட்டில் அசத்திய சவுரப் வர்மா 21-17 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றினார். இதன் மூலம் ஜப்பானின் கோகி வாடானபே 18-21, 21-12, 21-17 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்திய சவுரப் வர்மா சாம்பியன் பட்டம் வென்றார்.

இந்த சீசனில் சவுரப் வர்மாவின் முதல் பட்டம் இதுவாகும். ஒட்டுமொத்தமாக இது அவருக்கு இரண்டாவது பட்டமாகும். இதற்கு முன், 2016ல் சீனதைபே மாஸ்டர்ஸ் தொடரில் கோப்பை வென்றிருந்தார்.

மற்றொரு ஆட்டமான கலப்பு இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் ரோஹன் கபூர், குஹூ கார்க் ஜோடி, ரஷ்யாவின் விளாடிமிர் இவானோவ், தென் கொரியாவின் மின் குயுங் கிம் ஜோடியிடம் 19-21, 17-21 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியடைந்து.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here