சிம்பாபேவிற்கு எதிரான இருபதுக்கு இருப்பது (T20) போட்டியில் அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஆரோன் பிஞ்ச் உலக சாதனைப் படைத்துள்ளார்.
சிம்பாபே, அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான T20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் போட்டியில் அவுஸ்திரேலியா – சிம்பாபே அணிகள் மோதுகின்றன.
இப்போட்டியில் அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஆரோன் பிஞ்ச் 19 ஆவது ஓவரில் 71 பந்துகளில் 160 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். இதன்மூலம் சர்வதேச டி20 போட்டியில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர் என்ற தனது சொந்த சாதனையை முறியடித்தார். இதற்கு முன்னர் அவர் 156 ஓட்டங்கள் குவித்திருந்தார்.
தொடர்ந்து விளையாடிய ஆரோன் பிஞ்ச் 76 பந்தில் 16 பவுண்டரி, 10 சிக்சருடன் 172 ஓட்டங்கள் குவித்து உலகசாதனை படைத்துள்ளார்.