இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லியுடன் இணைந்து விளையாடியிருந்தால் சிறப்பானதாக இருந்திருக்கும் என இங்கிலாந்து பந்துவீச்சாளர் சாம் குர்ரான் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.ஆனால், இந்திய அணி இதுவரை இங்கிலாந்து மண்ணில் சிறப்பாக விளையாடியது கிடையாது. குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்தின் கையே ஓங்கியிருக்கும்.எனவே, இங்கிலாந்தில் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக, இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி கவுண்டி கிரிக்கெட்டில் சர்ரே அணிக்காக விளையாட முடிவு செய்திருந்தார். ஆனால், காயம் காரணமாக கடைசி நேரத்தில் அவரால் விளையாட முடியாமல் போய்விட்டது. இதே அணியில் இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் சாம் குர்ரான் இடம் பிடித்திருந்தார். அவர் கோஹ்லியுடன் இணைந்து விளையாட ஆர்வமாக இருந்தார்.இந்நிலையில், விராட் கோஹ்லியின் விலகல் அவருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அவர் கூறுகையில்,‘விராட் கோஹ்லி என்னுடைய அணியின் சக வீரராக வர இருந்ததை கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். மற்ற அணி பந்துவீச்சாளர்களை பார்த்து சிரிக்கலாம் என்று எதிர்பார்த்திருந்தேன். இங்கிலாந்து மண்ணில் விராட் கோஹ்லிக்கு, எந்தவொரு எதிரணி பந்து வீச்சாளர்களும் பந்து வீச விரும்புவார்கள். இங்கிலாந்து ஆடுகளம் அவர்களுக்கு சிறப்பானதாக இருக்கும். தற்போது எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தால், விராட் கோஹ்லியின் விக்கெட்டை வீழ்த்த முயற்சி செய்வேன். ஒவ்வொரு வீரர்களும் விராட் கோஹ்லி போன்ற மிகப்பெரிய வீரர்களுக்கு எதிராக விளையாட விரும்புவார்கள். ஏனென்றால் அவர்களுக்குள் தங்களை பரிசோதனை செய்ய வாய்ப்பு கிடைக்கும்.கோஹ்லி சர்ரே அணிக்கு விளையாடவில்லை என்றதும் சக வீரர்களுக்கு கஷ்டமாக இருந்தது. ஏனென்றால், விராட் கோஹ்லி வந்தால் அதிகமான ரசிகர்கள் வருவார்கள். அவருடைய பயிற்சியில் இருந்து கற்றுக் கொள்ளலாம் என்ற நினைப்பு வீணானது’ என தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here