டி20 கிரிக்கெட்டில் குறைவான Score-ஐ கூட வெல்ல முடியாமல் போவது சகஜம்தான் என பஞ்சாப் அணித்தலைவர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 25வது லீக் ஆட்டத்தில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் நேற்று மோதின, நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அஸ்வின் பந்துவீச்சை தெரிவு செய்தார்.
அதனைத் தொடர்ந்து விளையாடிய ஐதராபாத் அணி, 6 விக்கெட் இழப்புக்கு 132 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக மனீஷ் பாண்டே 54 ஓட்டங்கள் எடுத்தார்.
பஞ்சாப் அணி தரப்பில் அங்கித் ராஜ்புத் 14 ஓட்டங்கள் விட்டு கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். பின்னர் ஆடிய பஞ்சாப் அணி, 19.2 ஓவரில் 119 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆகி தோல்வியை தழுவியது.
அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 32 ஓட்டங்கள் எடுத்தார். ஐதராபாத் அணி தரப்பில் ரஷீத் கான் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்நிலையில் பஞ்சாப் அணித்தலைவர் அஸ்வின் கூறுகையில், ‘இந்த Pitch சிறப்பானது அல்ல, பந்து எளிதாக செல்லவில்லை, Pitch-யில் சிக்கியது, எளிதான Score-ஐ கூட எட்ட முடியாமல் தோற்றது ஏமாற்றமளிக்கிறது.
டி20 போட்டிகளில் இதுபோன்று நடப்பது சகஜம், இதில் இருந்து அடுத்தக் கட்டத்துக்கு செல்ல வேண்டும், சில Catch-களை தவறவிட்டது பற்றி கேட்கிறீர்கள், வெளிச்சத்தின் கீழே பந்தை பிடிப்பது கடினம்.
இருந்தாலும் அதை காரணமாக கூற முடியாது, ஏனென்றால் நாங்கள் தொழில்முறை கிரிக்கெட் வீரர்கள், இன்னும் கடினமாக உழைக்க வேண்டும், எங்கள் அணியில் ராஜ்புத் சிறப்பாக வீசினார்.
ஐதராபாத் அணியில் ரஷித் கான் அற்புதமாகச் செயல்பட்டார், இதுபோன்ற Pitch-யில் ரஷித்திடம் இருந்து இப்படியான பந்துவீச்சை எதிர்பார்க்கலாம்தான்’ என தெரிவித்துள்ளார்.