ஐதராபாத் சன்ரைசர்ஸ்– கிங்ஸ் லெவன் பஞ்சாப்
இடம்: ஐதராபாத், நேரம்: இரவு 8 மணி
வில்லியம்சன் கேப்டன் அஸ்வின்
நட்சத்திர வீரர்கள்
ஷிகர் தவான், யூசுப் பதான், புவனேஷ்வர்குமார், மனிஷ் பாண்டே, ரஷித்கான், சித்தார்த் கவுல்.
––
கிறிஸ் கெய்ல், லோகேஷ் ராகுல், யுவராஜ்சிங், கருண்நாயர், ஆண்ட்ரூ டை, முஜீப் ரகுமான்
வெற்றி 8 இதுவரை நேருக்கு நேர் 11 வெற்றி 3
பஞ்சாப் அணிக்கு பதிலடி கொடுக்குமா ஐதராபாத்?
இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். ஆதிக்கம் அணிகளில் ஒன்றான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 6 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே (பெங்களூருவுக்கு எதிராக) தோல்வி கண்டுள்ளது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் பஞ்சாப் அணி வலுவாக இருப்பதால் தான் கம்பீரமாக பயணிக்கிறது. பேட்டிங்கில் கெய்ல் (229 ரன்), லோகேஷ் ராகுல் (236 ரன்), கருண் நாயர் (173 ரன்) உள்ளிட்டோர் அணியின் தூண்களாக விளங்குகிறார்கள். பந்து வீச்சில் அஸ்வின் (5 விக்கெட்), ஆண்ட்ரூ டை (9 விக்கெட்), முஜீப் ரகுமான் (6 விக்கெட்) ஆகியோர் கலக்குகிறார்கள். உடல்நலக்குறைவால் கடந்த ஆட்டத்தில் விளையாடாத அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் களம் திரும்ப வாய்ப்புள்ளது.
முன்னாள் சாம்பியனான ஐதராபாத் அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது. கடந்த ஆட்டத்தில் மும்பைக்கு எதிராக 118 ரன்கள் மட்டுமே எடுத்த போதும் அந்த ஸ்கோரை வைத்துக் கொண்டு மும்பையை முடக்கியது. ஐதராபாத் அணியின் பிரதான பலமே பந்து வீச்சு தான். இதுவரை கிடைத்துள்ள 4 வெற்றிகளிலும் பந்து வீச்சாளர்களின் பங்களிப்பே அதிகம். காயத்தால் முந்தைய ஆட்டத்தில் ஓய்வு எடுத்த புவனேஷ்வர்குமார் இன்றைய ஆட்டத்தில் ஆடுவார் என்று தெரிகிறது. 20 ஓவர் கிரிக்கெட்டின் ‘நம்பர் ஒன்’ பந்து வீச்சாளர் ரஷித்கான் (6 விக்கெட்), சித்தார்த் கவுல் (9 விக்கெட்), ஷகிப் அல்–ஹசன் (6 விக்கெட்) ஆகியோரும் சிறப்பாக பந்து வீசி வருகிறார்கள். ரன் குவிப்பில் கேப்டன் வில்லியம்சன் (3 அரைசதத்துடன் 259 ரன்), யூசுப்பதான் (124 ரன்), ஷிகர் தவான் (135 ரன்) பார்மில் இருக்கிறார்கள். ஆனால் ரூ.5 கோடிக்கு வாங்கப்பட்ட விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா 6 ஆட்டங்களில் வெறும் 62 ரன்கள் மட்டுமே எடுத்திருப்பது தான் அந்த அணிக்கு கவலைக்குரிய அம்சமாக இருக்கிறது.