ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னைக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி தாமதமாக பந்து வீசியதால் விராட் கோலிக்கு அபராதம
ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற 24-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அசத்தல் வெற்றியை பெற்றது.
இந்த போட்டியில், பெங்களூரு அணி பந்து வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டது. இதையடுத்து, அந்த அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.