புனேயில் நடைபெற்ற சென்னை அணி மோதிய போட்டியில் பெண் ரசிகை ஒருவர் டோனியை காதலிப்பதாக கூறி கையில் பேனர் ஒன்றை வைத்திருந்தது தொடர்பான புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் தொடரின் 17-வது லீக் போட்டியில் சென்னை-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. பரபரப்பாக செல்லும் என்றும் எதிர்பார்க்கப்பட்ட இப்போட்டியில் சென்னை அணி 64 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அசால்ட்டாக வெற்றி பெற்றது. கடந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டோனி இன்றைய போட்டியில் அதிரடி காட்டுவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த நிலையில், வெறும் 5 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றினார்.
இந்நிலையில் இப்போட்டியின் போது டோனி ரசிகை ஒருவர் வருங்கால கணவரே என்னை மன்னித்துவிடுங்கள், டோனி தான் எப்போதும் என்னுடைய முதல் காதலன் என்று எழுதி ஒரு பேனரை கேமரா முன்பு காட்டினார். இது தொடர்பான புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.