ஐபிஎல் ஏலத்தில் யாரும் சீண்டாத கெய்லை ஏலத்தில் எடுத்ததன் மூலம் தற்போது வெற்றிமேல் வெற்றியை குவித்து வருகிறார் ப்ரீத்தி ஜிந்தா.
பல சீசன்களாக பெங்களூரு அணிக்காக விளையாடியவர் கிறிஸ் கெய்ல். பல்வேறு போட்டிகளில் சிறப்பாக விளையாடி பெங்களூரு அணிக்கு வெற்றியை தேடித்தந்தவர். ஆனால் கடந்த சீசனில் அவ்வளவாக சிறப்பாக செயல்படவில்லை.
இதன் காரணமாக இந்த ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் கெய்லை ஏலத்தில் எடுக்க யாரும் முன் வரவில்லை.
ப்ரீத்தி ஜிந்தா வசம்:
ப்ரீத்தி ஜிந்தாவின் பஞ்சாப் அணிக்காக கெய்ல் கடைசி நேரத்தில் வாங்கப்பட்டார். கெய்ல் அணிக்கு உதவுவார் என கூறி பஞ்சாப் அணியின் ஆலோசகரான சேவாக் கெய்லை வாங்க வற்புறுத்தினார்.
இதற்கு தற்போது கைமேல் பலன் கிடைத்து வருகிறது. சென்னை அணிக்கு எதிராக அதிரடியாக அரைசதம் விளாசிய கெய்ல், தற்போது ஐதராபாத் அணிக்கு எதிராக 59 பந்தில் சதம் விளாசி அசத்தினார்.
கெயலால் பஞ்சாப் தற்போது மிக சிறந்த பேட்டிங் சக்தியை பெற்றுள்ளது.