27.2 C
Vavuniya
Tuesday, June 6, 2023
முகப்பு விளையாட்டுச் செய்திகள் 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப்படுத்துகிறது இங்கிலாந்து

100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப்படுத்துகிறது இங்கிலாந்து

0

கிரிக்கெட் ஐந்து நாட்கள் டெஸ்ட் போட்டியில் இருந்து ஒருநாள் கிரிக்கெட்டான 50 ஓவர் கிரிக்கெட்டாக மாறியது. பின்னர் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் டி20 ஓவராக மாறியது. தற்போது சர்வதேச அளவில் டி20 கிரிக்கெட்டிற்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. சுமார் நான்கு மணி நேரத்திற்குள் போட்டி முடிந்துவிடும் என்பதால் ரசிகர்களும் அதிக அளவில் மைதானத்திற்கு படையெடுக்கிறார்கள்.

டெஸ்ட் போட்டி 20 ஓவராக சுருங்கியதற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகம் படுத்த திட்டமிட்டுள்ளது. 2020-ம் ஆணடில் இருந்து 8 அணிகள் பங்கேற்கும் 100 பந்து போட்டி தொடரை தொடங்க இங்கிலாந்து திட்டமிட்டுள்ளது. 15 ஓவர்கள் 6 பந்து வீதம் வீசப்படும். கடைசி ஓவரில் 10 பந்துகள் வீசப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே, டி20 போட்டியில் டெஸ்ட் கிரிக்கெட் அழிந்து வருகின்றது என்று முன்னாள் வீரர்கள் கவலையடைந்து வரும் நிலையில், 100 பந்து போட்டி முடிவிற்கு முன்னாள் வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here