காவிரி பிரச்சனையில் எதிர்ப்பு எழுந்ததால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போட்டிகள் அனைத்தும் புனே மைதானத்திற்கு மாற்றப்பட்டது. மைதானத்தை பராமரிக்க அதிகளவு தண்ணீர் தேவைப்படும் ஆனால் புனேவில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது என மும்பை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், புனே மைதான நிர்வாகிகள் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில், இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பவாணா அணையிலிருந்து மைதான பராமரிப்பிற்கு தண்ணீர் எடுக்க நீதிபதிகள் தடை விதித்தனர்.
இதனால், சென்னை அணிக்கு மீண்டும் ஒரு சிக்கல் எழுந்துள்ளது.