32.7 C
Vavuniya
Friday, September 29, 2023
முகப்பு விளையாட்டுச் செய்திகள் பொதுநலவாய போட்டிகள் முடிவடைந்து 4 நாட்கள் ஆகியும் வீரர்களுக்கான பணப்பரிசு குறித்து எதுவித தகவலும் அமைச்சால்...

பொதுநலவாய போட்டிகள் முடிவடைந்து 4 நாட்கள் ஆகியும் வீரர்களுக்கான பணப்பரிசு குறித்து எதுவித தகவலும் அமைச்சால் வெளியிடப்படவில்லை.

0

இலங்கை விளை­யாட்­டுத்­துறை வர­லாற்றில் முதன்­மு­றை­யாக பொது­ந­ல­வாய விளை­யாட்டு விழாவில் இலங்கை ஒரு வெள்ளி மற்றும் 5 வெண்­கலப் பதக்­கங்­க­ளுடன் 6 பதக்­கங்களை வென்று சாதித்­துள்­ளது.

இந்­நி­லையில் பொது­ந­ல­வாய விளை­யாட்டு விழா ஆரம்­பிக்­கும்­வரை அதா­வது கடந்த 4ஆம் திக­தி­வ­ரை விளை­யாட்­டுத்­துறை அமைச்­ச­ராக இருந்த தயா­சிறி ஜய­சே­கர, பொது­ந­ல­வாய விளை­யாட்­டுக்­களில் பதக்கம் வெல்லும் வீரர்­க­ளுக்கு வழங்­கப்­படும் பரி­சுத்­தொகையை அதி­க­ரிப்­ப­தாக அறி­வித்தார்.

கடந்த ஜன­வ­ரி­ மாதம் அவரால் அறிவிக்கப்பட்ட வாறு தங்­கப்­ப­தக்­கத்­துக்கு ரூ. 50 இலட்­சமும், வெள்ளிப் பதக்­கத்துக்கு ரூ. 40 இலட்­சமும் வெண்­கலப் பதக்­கத்­துக்கு ரூ. 30 இலட்சமும் பரி­சாக வழங்­கப்­படும் என்றார்.

தற்­போது இலங்கை அணி 6 பதக்­கங்­க­ளுடன் நாடு திரும்­பி­யுள்ள நிலையில் அவர்­க­ளுக்கு வழங்­க­வேண்­டிய பணப்­ப­ரிசு ரூ. 190 இலட்­ச­மா­க­வுள்­ளது.

பொது­வாக பதக்­கத்­துடன் நாடு திரும்­பிய வீரர்­க­ளுக்கு இரு நாட்களுக்குள் விளையாட்டுத்துறை அமைச்சால் பரிசில்கள் வழங்கிவைக்கப்படும்.

ஆனால், பொதுநலவாய போட்டிகள் முடிவடைந்து 4 நாட்கள் ஆகியும் வீரர்களுக்கான பணப்பரிசு குறித்து எதுவித தகவலும் அமைச்சால் வெளியிடப்படவில்லை.

விளையாட்டுத்துறையை பொறுப்பேற் றுள்ள புதிய அமைச்சர் பைஸர் முஸ்தபா இதுகுறித்து உடனடியாக கவனம் செலுத்து வது அவசியம்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here