மும்பை அணிக்கெதிரான போட்டியின் போது பாண்ட்யாவின் பேட்டில் பட்டு பந்து சென்ற போதும் அவுட் கொடுக்க நடுவர் மறுத்ததால், கோஹ்லி நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஐபிஎல் தொடரின் நேற்றைய 14-வது லீக் போட்டியில் ரோகித் தலைமையிலான மும்பை அணியும், கோஹ்லி தலைமையிலான பெங்களூரு அணியும் மோதின.

இப்போட்டியில் 0 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட் என்று இருந்த மும்பை அணி அதன் பின் ரோகித் சர்மாவின் விஸ்வரூப ஆட்டத்தால் 213 ஓட்டங்கள் குவித்தது. ரோகித் சர்மா 52 பந்துகளுக்கு 94 ஓட்டங்கள் குவித்தார். அதன் பின் ஆடிய பெங்களூரு அணிக்கு கோஹ்லியை தவிர அனைவருமே ஏமாற்றியதால் அந்தணி 8 விக்கெட் இழப்பிற்கு 167 ஓட்டங்கள் எடுத்து 46 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இப்போட்டியின் போது ஆட்டத்தின் 19-வது ஓவரை பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளர் வோக்ஸ் பந்தை, மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் பாண்ட்யா தடுத்தாட முற்பட்டார். அப்போது பந்தானாது பேட்டில் பட்டு கீப்பரிடம் சென்றது. இதனால் பெங்களூ அணி முறையிட்ட போது நடுவர் அவுட் கொடுத்ததும் மும்பை இந்தியன்ஸ் ரீவ்யூ எடுத்ததால் அது மூன்றாவது நடுவரிடம் எடுத்துச் செல்லப்பட்டது.

டிவி ரீப்ளேவில் பார்த்த போது பந்தானது பேட்டில் பட்டும், படாததும் போல் குழப்பமாக இருந்தால் மூன்றாவது நடுவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சாதகமாக கொடுத்தார்.

உடனே இதைக் கண்ட கோஹ்லி நடுவர்களிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதுமட்டுமின்றி வோக்ஸ் பந்தானது பேட்டில் பட்டது அப்படியே தெரிகிறது என்று மைதானத்தில் இருந்த டிவியை கோஹ்லியிடம் காண்பித்தார்.

இருப்பினும் நடுவரின் தீர்ப்பே இறுதியானது என்பதால், கோஹ்லி பெரும் கோபத்துடனே பீல்டிங் செய்தார். அந்த அவுட்டிலிருந்து தப்பிய பாண்ட்யா பவுண்டரி, சிகஸர் என அந்த ஓவரில் மொத்தம் 21 ஓட்டங்கள் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here