மும்பை அணிக்கெதிரான போட்டியின் போது விராட் கோஹ்லியின் ஆட்டத்தை பிரபல நடிகை ரவீணா டாண்டன் புகழ்ந்து தள்ளியுள்ளார். ஐபிஎல் தொடரின் நேற்றைய 14-வது லீக் போட்டியில் விராட் கோஹ்லி தலைமையிலான பெங்களூரு அணி மோசமான தோல்வியை சந்தித்தது.

இப்போட்டியில் மும்பை அணி நிர்ணயித்த 213 ஓட்டங்களை தனி ஒருவனாக கடைசி வரை போராடிய கோஹ்லி 62 பந்துகளுக்கு 92 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். டி காக், டி வில்லியர்ஸ் போன்ற வீரர்கள் ஆட்டமிழந்தும், தன்னம்பிக்கையுடன் இலக்கை அடைய போராடிய கோஹ்லிக்கு சமூகவலைத்தளங்களில் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் நேற்றைய போட்டி முடிவுக்கு பின் பேசிய கோஹ்லி அதிக ஓட்டம் எடுத்து என்ன பயன்? அணி தோல்வியடைந்துவிட்டதே என்று மிகவும் விரக்தியில் பேசினார். இந்நிலையில் பிரபல நடிகையான ரவீணா டாண்டன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், தனி ஒருவனாக போராடிய கோஹ்லியின் ஆட்டத்தைக் கண்டு என்னுடைய இதயத்தை பறிகொடுத்துவிட்டேன், அற்புதமாக விளையாடினீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here