ஐ.பி.எல். தொடரின் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில், அவ் அணியின் கிறிஸ் கெய்ல், முஜீப் உர் ரஹ்மான் ஆகியோர் சிறப்பாக விளையாடியதாக, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் மகேந்திர சிங் டோனி வாழ்த்தியுள்ளார்.

நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) மொஹலியில் நடைபெற்ற 13ஆவது லீக் போட்டியில், சென்னை அணி 4 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

இந்த தோல்வியின் பின் நிருபர்களிடம் கருத்து தெரிவித்த டோனி,

“பஞ்சாப் அணியில் கிறிஸ் கெய்ல் துடுப்பாட்டம் அபாரமாக இருந்தது. இதேபோல முஜீப் நன்றாக பந்துவீசினார்.

இரண்டாவது இன்னிங்ஸில் பனி அதிகமாக இருக்கும் என்று கருதி பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தேன்.

ஆனால் எதிர்பார்த்த பலன் இல்லை. எந்த மாதிரியான பந்துகளை அடிக்காமல் விட்டோம் என்பது உள்ளிட்ட விஷயங்களை யோசித்து நாங்கள் செயல்பட வேண்டிய நேரம் இதுவாகும்.

அனைத்து போட்டியிலும் வெற்றி அருகே தான் இருக்கிறது. ஆனால் அணியில் உள்ளவர்கள் இதில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். அனைத்து துறையிலும் நாங்கள் இன்னும் முன்னேற வேண்டி இருக்கிறது”என கூறினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here