ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் சஞ்சு சாம்சன் 10 சிக்ஸர்கள் அடித்து, ஒரே போட்டியில் அதிக சிக்ஸர்கள் விளாசியவர்களில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஐ.பி.எல் 11வது ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராய்ல்ஸ் அணி 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் வீரர் சஞ்சு சாம்சன் 45 பந்துகளில் 92 ஓட்டங்கள் விளாசினார். இதில் 10 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் அடங்கும். இதன் மூலம், ஐ.பி.எல் போட்டியில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர்களில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இதற்கு முன்பு, கடந்த 2010ஆம் ஆண்டு முரளி விஜய் ராஜஸ்தான் அணிக்கு எதிராக 11 சிக்ஸர்கள் விளாசியிருந்தார்.