டெல்லி-ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியில் ராஜஸ்தான் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தியது.
ஐபிஎல் தொடரின் 6வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியும், டெல்லி அணியும் மோதின. இதில் முதலில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் காம்பிர், முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தார்.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 17.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்திருந்தபோது, மழை குறுக்கிட்டது. இதனால், ஆட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இதையடுத்து, மழை நின்றபின் டக்வர்த் லூவிஸ் முறையில் டெல்லி அணிக்கு 6 ஓவர்களில் 71 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதன்பின் களமிறங்கிய டெல்லி அணி வீரர்கள், ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தனர். இதனால் அந்த அணி 6 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 60 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதனால், ராஜஸ்தான் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இந்த ஆண்டு தொடரின் முதல் வெற்றியைப் பதிவு செய்தது. மேலும், மழையின் காரணமாக டெல்லி அணி தனது இரண்டாவது தோல்வியைச் சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.