26.1 C
Vavuniya
Tuesday, September 26, 2023
முகப்பு விளையாட்டுச் செய்திகள் காயத்தால் ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகுகிறார் ரெய்னா

காயத்தால் ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகுகிறார் ரெய்னா

0

சென்னை அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா காயம் காரணமாக அடுத்த இரண்டு போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

11வது ஐபிஎல் போட்டிகள் கோலாகலமாக தொடங்கி, சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இதன் 5 வது லீக் போட்டியில் சென்னை-கொல்கத்தா அணிகள் மோதின.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில், சென்னை அணி கடைசி ஓவரில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தது.

இந்நிலையில், சென்னை அணி பேட்டிங் செய்யும்போது, சென்னை அணியின் பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னாவுக்கு முழங்காலில் வலி ஏற்பட்டது. இதனால், அவர் பெரிதும் அவதிக்கு உள்ளானார்.

இதையடுத்து, அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவர் அடுத்து நடைபெறும் இரண்டு போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என சென்னை அணி நிர்வாகம் அதன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, ஆல்ரவுண்டர் கேதர் ஜாதவுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக, அவர் அணியிலிருந்து விலகியுள்ள நிலையில், தற்சமயம் சுரேஷ் ரெய்னாவும் இரண்டு போட்டிகளில் விளையாட முடியாமல் போனது சென்னை அணியை மிகுந்த இக்கட்டுக்கு உள்ளாக்கியுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here