பிரான்ஸில் 66 சதவீத மக்களுக்கு தடுப்பூசியின் இரண்டு அளவுகளும் செலுத்தப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

செப்டம்பர் 1ஆம் திகதி நிலவரப்படி, இதுவரை 48,767,471 பேர் தங்களுக்கான முதலாவது தடுப்பூசியினை பெற்றுக்கொண்டுள்ளனர். இது தடுப்பூசி போட தகுதியுடைய நாட்டு மக்கள் தொகையில் 86 சதவீதமாகும்.

அதேவேளை, 44.5 மில்லியன் பேர் (துல்லியமாக 44,574,529 பேர்) தங்களுக்கான இரட்டை தடுப்பூசிகளையும் நிறைவு செய்துள்ளனர். இது நாட்டு மக்கள் தொகையில் 66 சத வீதமாகும்.

அதேவேளை, தடுப்பூசி போட தகுதியுடைய அனைவரும் இம்மாத இறுதிக்குள் தங்களது முதலாவது தடுப்பூசியை பெறவுள்ளனர்.

அத்துடன், இன்னும் 10 மில்லியனுக்கும் குறைவானவர்களே தடுப்பூசி போட காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here