இலங்கை மக்கள் உடனடியாக சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என சுகாதார துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உலகில் புதிதாகப் பதிவாகியுள்ள கோவிட் வைரஸின் துணை வகையான Arcturas தொற்றாளர்கள் இன்னமும் இலங்கையில் உறுதிப்படுத்தப்படவில்லை.

எனினும் பருவகால காய்ச்சல் மற்றும் டெங்கு உள்ளிட்ட பல நோய்கள் பரவுவதால், முந்தைய சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளைப் மீண்டும், பின்பற்றுவது அவசியம் என இலங்கை அரச வைத்தியர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சமில் விஜேசிங்க நாட்டு மக்களுக்கு தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Health Sectors Warns Sri Lankans

சுகாதார பாதுகாப்பு

தற்போது பெய்து வரும் மழையுடனான காலநிலை மற்றும் பண்டிகைக் காலங்களில் அதிகளவு மக்கள் கூடுவதனால் சுகாதார பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கூறுகிறார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here