ஐஎம்எப் நிதியுதவி தொடர்பான, புதிய இறையாண்மைக் கடன் வட்ட மேசையின் முதல் மெய்நிகர் கலந்துரையாடலில் இலங்கை இன்று (வெள்ளிக்கிழமை) பங்கேற்கவுள்ளது.

இலங்கை, ஈக்வடார் உள்ளிட்ட நாடுகளின் கடன்கள் தொடர்பில் ஆராய, சீனா, இந்தியா, சவுதி அரேபியா மற்றும் ஏழு நாடுகளின் இணைந்த குழுவின் அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளனர்.

எத்தியோப்பியா, சாம்பியா மற்றும் கானா ஆகிய 20 பொதுவான கட்டமைப்பின் கீழ் கடன்களை கோரிய நாடுகளின் அதிகாரிகளும், தங்கள் சொந்த கடன் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள இலங்கை, சுரினாம் மற்றும் ஈக்வடார் போன்ற நடுத்தர வருமான நாடுகளின் அதிகாரிகளும் இந்த வட்டமேசை சந்திப்பில் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐஎம்எப் தலைமையில், உலக வங்கி மற்றும் ஜி20 குழுவின் தற்போதைய தலைவரான இந்தியா ஆகியோரால் இணைந்து நடத்தப்படும் இந்த பேச்சுவார்த்தையில், இலங்கைக்கு கடனுதவி வழங்குவது குறித்து முக்கிய தீர்மானம் எட்டப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here