13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு இலங்கைக்கு அழுத்தம் பிரயோகிக்க இந்தியாவுக்கு தார்மீக உரிமை கிடையாது என சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் மேற்பார்வையுடனான விசேட பொறிமுறையை உருவாக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அவதானம் செலுத்தியுள்ளார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக குறிப்பிட்டுக் கொண்டு இந்தியா பலவந்தமான முறையில் 13 ஆவது திருத்தத்தை இலங்கைக்கு அமுல்படுத்தியது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

வடக்கு கிழக்கு மக்களை முன்னிலைப்படுத்தி அரசியல் செய்யும் தமிழ் தலைவர்கள், அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண அவதானம் செலுத்துவதில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கே மக்கள் ஆணை வழங்கினார்கள் என்பதனால் ஜனாதிபதி அதுகுறித்தே அவதானம் செலுத்த வேண்டும் என சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

மேலும் ஒற்றையாட்சிக்குள் அதிகார பகிர்வு வழங்கப்பட்டாலும் பொலிஸ் அதிகாரத்தில் மாற்றமில்லை என கூறும் ஜனாதிபதியின் உறுதிப்பாடு எவ்வளவு நாட்களுக்கு செல்லுபடியாகும் என்றும் சரத் வீரசேகர கேள்வியெழுப்பியுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here