யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் மீள்குடியேறவுள்ள 197 குடும்பங்களுக்கு காணி உறுதிப் பத்திரங்கள் மற்றும் தலா 38,000 ரூபாய் காசோலைகள் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய, யுத்தத்தின் போது பாதுகாப்பு படையினரால் பயன்படுத்தப்பட்ட வடக்கில் உள்ள காணிகளை பூர்வீக மக்களிடம் மீள ஒப்படைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, பலருக்கு காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் காசோலைகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வழங்கி வைக்கப்பட்டது.

33 வருடங்களாக இடம்பெயர்ந்து வாழந்துவரும் இவர்கள் தமது காணிகளை விடுவித்தமைக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு நன்றியும் தெரிவித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here