வாழைச்சேனையில் பொலிஸ் உத்தியோதத்தரின், மனைவியான ஆசிரியர் ஒருவர் உருக்குலைந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள போத்தாளை பிரதேசத்தில் வீடொன்றில் இருந்து இன்று (வியாழக்கிழமை) குறித்த பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

இவர் கல்குடா பிரதான வீதி போத்தாளையைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயாரான 52 வயதுடைய சகுந்தலாதேவி என அடையாளக்காணப்பட்டுள்ளார்.

குறித்த ஆசிரியரின் கணவர் யாழ் இளவாளை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவருவதுடன் இவரின் மூன்று பிள்ளைகளும் கொழும்பில் வசித்துவரும் நிலையில் குறித்த ஆசிரியர் தனிமையில் இருந்து வந்துள்ளார்

குறித்த சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையை தடவியல் மற்றும் குற்றதடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here