13 வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தவும், அரச வளங்களை தனியார்மயப்படுத்தவும் ஜனாதிபதிக்கு தார்மீக உரிமை கிடையாது என விமல் வீரவன்ச தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மக்கள் பிரதிநிதியல்ல என்றும் மக்களாணை இல்லாத அவருக்கு அத்தகைய அதிகாரங்களை இல்லை என்றும் குறிப்பிட்டார்.

மாகாணங்களுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை பகிர்ந்தளித்தால் நாட்டில் தேவையில்லாத பிரச்சினைகள் தோற்றம் பெறும் என்றும் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதாக குறிப்பிட்டுக் கொண்டு மிகுதியாக உள்ள வளங்களை தனியார்மயப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கின்றது என குற்றம் சாட்டினார்.

மேலும் பொருளாதார நெருக்கடியை காண்பித்து நாட்டுக்கு எதிரான பல விடயங்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செய்யப்படுத்த ஆரம்பித்துள்ளார் என விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here