பணத்திற்காக 15 வயது சிறுமியை வர்த்தகர்கள் உள்ளிட்ட பல்வேறு நபர்களுக்கு விற்பனை செய்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் சிறுமியின் தாய் மற்றும் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் 42, 45, 54 மற்றும் 84 வயதுடைய பாணந்துறை, கெசல்வத்த மற்றும் கோரக்கன பிரதேசங்களைச் சேர்ந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறுமி ஒருவரை பணத்திற்காக வயதானவர்களுக்கு விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸ் குழுவினர் சிறுமியை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

மேலும் பொலிஸ் விசாரணையில், அப்பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், சிறுமியின் தாயை ஏமாற்றி பணம் கொடுத்து சிறுமியை விற்றுள்ளமை தெரியவந்துள்ளது.

சந்தேகத்திற்கிடமான தொழிலதிபரான பெண், பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரைக் கண்டுபிடிக்க விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here