கொழும்பு- கண்டி பிரதான வீதியில் வரகாபொல மற்றும் அம்பேபுஸ்ஸ ஆகிய பகுதிகளுக்கு இடையிலான வாகன போக்குவரத்து ஒரு வார காலத்திற்கு ஒரு வழி பாதையாக மட்டுப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் பெப்ரவரி முதலாம் திகதி வரை குறித்த பகுதி போக்குவரத்துக்கு மட்டுப்படுத்தப்படவுள்ளது.

குறித்த பகுதிக்கு காபட் இடப்படவுள்ள பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதால் இவ்வாறு முடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கொழும்பு மற்றும் கண்டி நோக்கி செல்லும் வாகன சாரதிகளை மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அதற்கமைய, கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகனங்கள் மாவனெல்ல – ரம்புக்கனை வீதியின் குருணாகல் வரை பயணித்து, மீரிகம ஊடாக பஸ்யால சந்திக்கு பிரவேசித்து அல்லது கேகாலை வரை பயணித்து பொல்கஹவெல, அலவ்வ, மீரிகம, பஸ்யால ஊடாக பஸ்யால சந்திக்கு பிரவேசித்து கொழும்பு நோக்கி பயணிக்க முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. .

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here