கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை நடத்துவது தொடர்பான அனைத்து அடிப்படை நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை நாளை (திங்கட்கிழமை) முதல் 2 ஆயிரத்து 200 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளது.

3 இலட்சத்து 31 ஆயிரத்து 709 பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரர்கள் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.

அத்துடன், பரீட்சை நிலையங்களின் பாதுகாப்பிற்காக விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here