நுவரெலியா, ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா குறுந்தொகை வீதியில் கனரக வாகனங்கள் பயணிப்பதற்கு தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.

இன்று (சனிக்கிழமை) முதல் குறித்த நடைமுறை செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட தெரிவித்துள்ளார்.

குறித்த செங்குத்தான வீதியில் அதிகளவு விபத்துக்கள் இடம்பெறுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நேற்று (வெள்ளிக்கிழமை) குறித்த பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் 3 சிறுவர்கள் அடங்களாக 7 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here