முட்டை தட்டுப்பாடு ஜூன் மாதத்திற்குள் முடிவுக்கு வரும் என்று வர்த்தக, வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர் பிரியங்கா அத்தபத்து தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது நாளாந்தம் 3 மில்லியன் முட்டைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் அவர் கூறினார்.

இதனிடையே, முட்டை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் 32 ரூபாய் 5 சதத்துக்கு இறக்குமதி செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை, வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 44 ரூபாவாகவும் சிவப்பு முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 46 ரூபாவாகவும் நேற்று (வெள்ளிக்கிழமை) முதல் அமுலுக்கு வரும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here