அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களின் வீடுகளுக்கு ஆயுதம் தாங்கிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

அவர்களின் பாதுகாப்பிற்காக குறைந்தது இரண்டு ஆயுதம் தாங்கிய பொலிஸ் உத்தியோகத்தர்களாவது ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் இரண்டு உறுப்பினர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டமை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவது தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் இருவருக்கு தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக கடவத்தை பொலிஸ் நிலையத்திலும் கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்திலும் இருவேறு முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களான கே.பி.பி. பத்திரன மற்றும் எஸ்.பி. திவாரத்ன ஆகியோர் ஆணைக்குழுவில் இருந்து விலகாவிட்டா கொலை செய்யப் போவதாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here