கடந்த 24 மணியாலங்களில் இடம்பெற்ற விபத்துகளில் இரண்டு குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

ராகலை பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டரை வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கரவண்டியில் பயணித்த மற்றுமொரு குழந்தை காயமடைந்து நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் 16 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

நாவலப்பிட்டி பகுதியில் பேருந்திலிருந்து தவறி விழுந்து 16 வயதுடைய பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு – மட்டக்களப்பு வீதியின் தலவத்துவன பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று வேனுடன் மோதியதில் 19 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, மோட்டார் சைக்கிள் ஒன்று பேருந்துடன் மோதியதில் கலேன்பிந்துனுவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளார்.

மேலும், பத்தேகம – ஹம்மாலியா பகுதியில் மோட்டார் சைக்கிள் மற்றும் கெப் வாகனம் மோதியதில் பத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதான இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளும் லொறியும் மோதி விபத்துக்குள்ளானதில் 39 வயதுடைய நபர் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, பத்தேகம – மடவலமுல்ல பகுதியில் ஜீப் வண்டியுடன் மோதியதில் 50 வயதுடைய பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் வெலிகந்த, சிங்கபுரவில் 57 வயதுடைய நபரும் உயிரிழந்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here