வட மாகாணத்தின் முன்னாள் ஆளுநரும், முன்னாள் அமைச்சருமான ரெஜினோல்ட் குரே தனது 74 ஆவது வயதில் நேற்று(வியாழக்கிழமை) காலமானார்.

வாத்துவ ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற சந்திப்பின் போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

அதையடுத்து, அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் என வைத்தியசாலைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, மேலதிக சிகிச்சைகளுக்காக களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இதன்போதே, சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here