இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் சகோதரர் மற்றும் ஜேவி.பி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் நடேசன் சுந்தேரசேன் ஆகியோர் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியில் நேற்று (வியாழக்கிழமை) இணைந்துள்ளதாக அக் கட்சியின் மட்டு. மாவட்ட அமைப்பாளர் தம்பிபிள்ளை சிவானந்தராஜா தெரிவித்தார்.

கட்சியில் இனைந்தவர்களை அறிமுகம் செய்யும் ஊடக சந்திப்பு மட்டக்களப்பு கிழக்கு மாகாண ஊடக மன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தாவை தலைமையாக கொண்டு இயங்கிவரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வடக்கு கிழக்கில் வீணைச் சின்னத்தல் தேர்தலில் போட்டியிடும் இந்த நிலையில்,  ஜே.வி.பி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராகவும் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அந்த கட்சியின் முதன்மை வேட்பாளராக களமிங்கிய ந. சுந்தேரேசன் அவரின் ஆதரவாளர்களுடன் ஈபி.டி.பி. கட்சியின் கொள்கையை ஏற்றுக் கொண்டு கட்சியில் இனைந்துள்ளார்.

அவ்வாறே இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் சகோதரரான சதாசிவம் மயூரன் மற்றும் இராஜாங்க அமைச்சரின் ஆதரவாக செயற்பட்ட இளைஞர்கள் கடந்த தேர்தலில் போட்டியிட்டவர்கள் சுஜேச்சைக் குழுக்களில் போட்டியிட்டவர்கள் கட்சியில் இணைந்துள்ளனர்.

எனவே எமது கட்சி ஒரு சுதந்திரமான கட்சி அனைவரும் வந்து இனைந்து செயற்படலாம் என்பதுடன் தற்போது இளைஞர்கள் இனைந்து வருகின்றதுடன் மாவட்டத்திலுள்ள 10 உள்ளூராட்சி மன்றங்களிலும் போட்டியிடுவதுடன் அனைத்து சபைகளையும் கைப்பற்றுவோம்” என்றார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here