எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மின்சாரத்தை தடை இன்றி வழங்க முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அண்மையில் பழுதடைந்த இரண்டு மின் உற்பத்தி அலகுகளும் அடுத்த இரண்டு வாரங்களில் மீண்டும் தேசிய மின்னோட்டத்துடன் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் ஒக்டோபர் இறுதிக்குள் நிலக்கரி கையிருப்பு தீர்ந்துவிட்டதால் மின்வெட்டை நீடிக்க வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம்.

ஆனால் நிலக்கரி கொள்முதல் சாத்தியம் காணப்படுகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தற்போது தினசரி இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள் மின்சாரம் தடைபடுவதோடு, அனல்மின்நிலையத்தில் உள்ள 3 வது அலகு எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் மீண்டும் தேசிய மின்தொகுப்புடன் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here