பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை நேற்று (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய இன்றைய தினமும் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை மொனராகலை பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக மக்களின் பேராதரவுடன் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், அரசியல்வாதிகள், சர்வமதத் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

பயங்கரவாத தடை சட்டத்தினை நீக்குமாறு வலியுறுத்தி இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் காங்கேசன்துறை முதல் ஹம்பாந்தோட்டை வரையில் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here