நிலக்கரி கொள்வனவு தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அரசாங்க நிதி தொடர்பான குழு விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர விடுத்த கோரிக்கைக்கு அமைய, இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிலக்கரி கொள்வனவு ஒப்பந்தம் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அரசாங்கத்தின் நிதிக்குழுவின் தலைவரிடம் எழுத்துமூலம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதற்கமைய இது தொடர்பான விசாரணைக்காக சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், கணக்காய்வாளர் நாயகத்துடன் இன்று (வியாழக்கிழமை) கலந்துரையாடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவிக்கும் வகையில் தொடர் வேலைத்திட்டங்களை தயாரிப்பதற்கு அரசாங்க நிதிக்குழுவில் முன்மொழியப்பட்டுள்ளது.

அதன் முதல் வேலைத்திட்டமாக, பணவீக்கத்திற்கும் வட்டி வீதத்திற்கும் இடையிலான தொடர்பு குறித்து அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அரசாங்க நிதி தொடர்பான குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்பும் அவசியமானது என ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here